tamilnadu

img

உ.பி.யில் கடவுள் சிலைகளுக்கு கம்பளி ஆடை அணிவிப்பு.. பக்தியின் பெயரால் அரங்கேறும் வேடிக்கை

லக்னோ:
உத்தரப்பிரதேசம், தில்லி, ஹரியானா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், கோடைக் காலத்தின்போது, சாமி சிலைகளுக்கு ‘வியர்க்கும்’ என்று ஏர் கண்டிசன் வசதி செய்வதும், குளிர்காலங்களில் சிலைகள் ‘நடுங்கும்’ என்று அவற்றுக்கு ஷொட்டர் அணிவிப்பதும் பக்தி என்ற பெயரால் நடைபெற்று வருகிறது. தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் காற்றுமாசுபாடு ஏற்பட்டபோது, புதிதாக சுவாசக் கவசம் அணிவிப்பதையும் வடமாநில பக்தர்கள் அறிமுகப்படுத்தினர்.இந்நிலையில், குளிர்காலம் துவங்கியிருப்பதையொட்டி, வழக்கம்போல உத்தரப்பிரதேச மாநில கடவுள் சிலைகளுக்கு தற்போது ஷொட்டர் (கம்பளி ஆடை) அணிவிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளனர்.குறிப்பாக, வாரணாசியில், படா கணேஷ் கோவில் கருவறை சிலையை அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள் ‘குல்ட்’ என்று கூறப்படும் கனத்த உடையால் மூடி வைத்துள்ளனர். பிள்ளையாரின் வாகனமான மூஷிகத்திற்கும் (எலி) ஒரு கம்பளி சால்வை வழங்கப்பட்டுள்ளது. சிவன் கோயில்களிலுள்ள சிவலிங்கங்களுக்கும் கூட ஷொட்டர் அணிவிக்கப்பட்டுள்ளது.கடவுள் சிலைகள் ‘பிராண் பிரதிஷ்டா’ என்ற பெயரில் எழுந்தருளல் செய்யப்பட்ட பிறகு, அவற்றுக்கு உயிர் இருப்பதாகவே நம்புகிறோம்; அதனால்தான் ஷொட்டர் அணிவிக்கிறோம் என்று ஆச்சார்யா சமீர் உபாத்யாயா என்பவர் விளக்கம் அளித்துள்ளார்.

;